Thursday, September 9, 2021

My story in Hyderabad only Tamil Magazine "Nirai" மாலுக்கு போகலாம்பா!

உமா இந்த ஏரியாக்கு வந்து ஒரு வாரங்களே ஆகிறது. அவள் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. இந்த கொரோனா முதல் அலையின் முடிவில், பள்ளிக்கு பக்கம் வீடு இருக்கட்டுமே என்று அவசர அவசரமாக இந்த வீட்டுக்கு வந்தாள். வந்த நேரம் இரண்டாம் அலை வந்து மறுபடியும், பள்ளி ஆன்லைன் யில் என்று ஆகிவிட்டது. வீடு இப்போதுதான் ஓரு வழியாக செட் ஆகியது. காலை வேலையை வழக்கம் போல் செய்து கொண்டிருதவளுக்கு ஒரு குழந்தையின் அழுகுரல், அது எதற்காக அழுவது என்று கவனிக்க வைத்தது. மாலுக்கு எப்போப்பா போலாம் என்று அழுது அடம்பிடித்து கொண்டு இருந்தது. ஹோ... மாளுக்காகவா! அது சரி இப்போது குழந்தைகளுக்கு வீடே ஜெயில் ஆகிவிட்டது. அதுவும் கீழே விளையாட அனுப்பக்கூட பயமாக இருக்கிறது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில், பெரியவர்களுக்கே வாரக்கடைசியானால் மாலில் தான் முடியும். இந்த கொரோனா வந்து எல்லாருக்குமே ஒரு பொழுதுபோக்குமே இல்லாமல் போய் விட்டது. இப்படி எண்ணிய நிலையில் என் வேலை முடிந்து ஆன்லைன் கிளாஸ் நான் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் அவ்வப்போது அந்த குழந்தையின் குரல் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. ஆன்லைன் கிளாஸ்சும் முடிந்து மதிய உணவு சாப்பிடலாம் என்று தட்டை வைத்தால் , இப்போது குழந்தை மிக அழுதது, நம் பக்கத்துக்கு வீடுதானே நாமே போய் கேட்டு சமாதானம் செய்யலாமா என்று யோசித்தாள். அனால், பக்கத்துக்கு வீட்டு அம்மாவை ஒரு இரு முறை பார்த்து புன்னகை செய்ததோடு சரி, பெரிய பரிச்சயம் இல்லை. எப்படி போய் கேட்பது என்று ஒரு யோசனையில் இருந்தாள். அப்போது பக்கத்துக்கு வீட்டு அம்மாவே வந்தார். மேடம்! குழாயில் தண்ணி வருகிறதா? எங்க வீட்ல கிச்சேன்ல வரல அதனாலதான் என்றாள். வாங்க! உள்ளே வாங்க நான் பார்த்துட்டு சொல்றேன் என்று கிச்சன் செக் செய்து பார்த்து, எல்லா மேடம் வரலை என்று சொன்னேன். ஓ சரி! வாச்மேனிக்கு சொல்றேன் என்று சொன்னவளை நான் ரொம்ப நேரமாக நினைத்து கொண்டு இருந்த கேள்வியை கேட்டே விட்டேன். மேடம்! ஏன் உங்க பொண்ணு மாலுக்கு போகணும்னு அழுதுண்டே இருக்கா, பாவம், இப்போ பசங்களுக்கு வீட்ல இருந்து இருந்து ஒரு சலிப்பு வந்திடுச்சு. நான் வேணும்னா வந்து சமாதான படுத்தி பாக்கறேனே என்றாள். அதற்கு பக்கத்துக்கு வீட்டு அம்மா, மேடம்னு எல்லாம் கூப்பாடாதீங்க என்னோட பேரு ஷாந்தி, நீங்க ஷாந்தி னே கூப்பிடலாம். அப்பறம் என்னோட பொண்ணு மாலுக்கு எப்போப்பா போலாம்னு அழறதுக்கு காரணம் அவ ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாதனலதான் என்று சொன்னவளை உமா கேள்வி குறியுடன் பார்த்தாள். என்னங்க குழப்பமா இருக்கா? என் கணவர் லேட்டஸ்ட் அசிஸ்சொரிஸ் (வளையல், கம்மல், செயின்) எல்லாம் வியாபாரம் பண்ணற வியாபாரி. மாலுளதான் எங்களோட சின்ன கடை இருக்கு. சனி ஞாயறுனா என் பொண்ணும் மாலுக்கு வந்துடுவா. இப்போ கொரோனால எல்லா மாலும் மூடி எங்களுக்கு வருமானமே இல்லை. கொஞ்சம் தெரிஞ்ச வாடிக்கையாளர்கள் வாங்கறதுனால வறுமை இல்லாமே இருக்கோம் ஆனா ஸ்கூல் பீஸ் கட்ட முடியலை அதனால என்பொண்ணு ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண கூடாதுனு சொல்லிட்டாங்க. சரி எப்படியாவது, கட்டிடலாம்னு இருக்கும் போது, இப்போ கட்டலைனா எக்ஸாம் இந்த வருஷம் எழுத முடியாதுனு சொல்லிட்டாங்க, 10 நாள் டைம் கொடுத்திருக்காங்க அதான் காலையிலேர்ந்து அழுதுகிட்டே இருக்கா என்று சொன்ன சாந்தியை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்து திகைத்து நின்றாள். இதை போல் எத்தனை எத்தனை சாந்திகளின் குடும்பம் கஷ்ட படுகிறதோ என்று நினைக்கையில் மனம் வலிக்கிறது...... எப்போது இது முற்று புள்ளிக்கு வரும்.... கண்டிப்பாக விடிவு வரும் என்ற நம்புவோம்.